Tuesday, June 01, 2010

There is no stopping for Tamil!!! ;-)

I really enjoyed writing this...

எத்தனை கோடி கோமாளித்தனமும் புரிந்திடலாம்,
உன் முப்பது டிகிரி சாய்ந்த முகத்தில்
கோல்கேட் முத்துக்களை மூடிய அதரங்களை சுழித்து
'லூசாப்பா நீ?' என்று கேட்கும் அழகிற்காக...

A lover's cry!!
என் கண்களுக்கு குளுமை மிக விருப்பம் போலும்,
ஆகையால்தான் அழவைப்பது நீ என்றறிந்தும்,
உன்னையே காண துடிக்கின்றதென் கண்கள்...

Now a romantic number!!
என்றுமே உன்னை நிற்காது தொடர்ந்த நிழலை
துரத்தி விட்டு, முடிசுடினேன் உன் அடிநிழலாய்...

அதற்கான நன்றியை தந்தாய்  எனக்கு வெகுமதியாய்,
ஒளியை அகற்றி...
ஓ!!! நிழல் இப்போது நிஜத்துடன் ஒன்றாகிவிட்டது!!!

Another one... ;-)
அடியே அழகி, நமக்கும்
இந்த ரெட்டை கதவுகளுக்கும்
ஒரு அந்தரங்க ஒற்றுமையடி ...
நாம் இணையும்போது
அவைகளும்
இணைந்து இருக்கின்றன..
புணர்ந்து பிரியும்போது,
அவையும்
பிரிந்து கிடக்கின்றன...

கதவு சாற்றப்படுகின்றது... So மீண்டும் சந்திப்போம்.. ;-)
அன்புடன், V

3 comments:

Gaya3 said...

ரசனை அமுதமானது ^ _ ^

Venkat said...

Means??

H Nandan said...

Vanthathey oru comment aduku kelvi veraya?